“மாறிவரும் புதிய உலக ஒழுங்கில், இந்துசமுத்திரமும் இலங்கையும்” என்ற ஆய்வின் இரண்டாம் அத்தியாயத்தில் சந்திக்கின்றேன்....
புதிய உலக ஒழுங்கு அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்காக தவிர்க்க முடியாதபடி விளங்குகின்றது. அமெரிக்காவை பொறுத்தவரை தன்மீதான சர்வதேச நாடுகள் தங்கியிருக்க செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றது. இத்தகையதொரு தன்மையினை அடைந்துகொள்ள அமெரிக்கா கடைப்பிடிக்கும் உபாயங்கள் மூண்றாம் உலக யுத்தத்திற்கு கூட வழிவகுக்கலாம். ஆனால் இது சீனாவின் இராஜதந்திர ரீதியிலான செயற்ப்பாட்டினை பொறுத்தே அமையும் என்பது எனது ராட்நோக்காக உள்ளது.பூகோள பிராந்திய நலன் அதிகாரங்கள் போன்றவற்றை கைப்பெற்ற ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நடாத்தும் அதிகார போராட்டத்தில் இந்து சமுத்திர பிராந்தியமும், இலங்கையும் முதன்மையான இடத்தினை பெற்றுள்ளன.
இந்து சமுத்திர பிராந்தியம் இன்று அரசியல் பொருளாதார இராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகியுள்ளது. வரலாற்றில் இப்பிராந்தியம் பெற்றிருந்த முக்கியத்துவத்தில் இருந்தே இன்றைய இதன் முக்கியத்துவத்தை உணரக் கூடியதாக உள்ளது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பெரும் பேரரசாக தோற்றம் பெற்ற சோழபேரரசு கிழக்கு ஆசிய நாடுகளில் தமது செல்வாக்கினை பெருக்கவும் பின்னர், அரேபியரின் கவனத்தை ஈர்த்த இப்பிராந்தியம் அரேபியரின் சமய, கலை, கலாச்சாரங்களை இப்பராந்திய நாடுகளில் பரப்பவும் வாய்ப்பு ஏற்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பிராந்தியத்தில் ஐரோப்பியர் ஆதிக்கம் பெற தொடங்கியதுடன், அவர்கள் உலகில் அரசியல் பொருளாதார ரீதியில் மேன்யைடைய வழி ஏற்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சமயத்தை பரப்ப செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.
இப்பிராந்திய நாடுகள் 2ஆம் உலக யுத்தத்தை தொடர்ந்து காலணித்துவ ஆதிக்கத்தை தோற்க்கடித்தன. இதனால் மேலைத்தேச வல்லரசுகள் இப்பிராந்தியத்திலுள்ள நலன்ளை தமதாக்கி கொள்ள புது வடிவங்களை நிலைநிறுத்த முற்;ப்பட்டனர். இத்தகையதொரு நிலையில் இந்து சமுத்திர நாடுகளின் நிலை இவ் வல்லரசுகளின் போட்டிக்குள் ஏதோ ஒரு வகையில் சிக்குண்டு தமது சுயாதிபத்தியத்தை இழந்து, அமைதி இழந்து வாழவேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளதாய் இருக்கின்றது.
இந்து சமுத்திரம் ஆபிரிக்கா, ஆசியா, அந்தாட்டிக்கா, அவுஸ்ரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது ஏறத்தாள 28,350,000 சதுரமையில் பரப்ih கொண்டதாகும். இந்து சமுத்திரம் உலகிலுள்ள பெரிய சமுத்திரங்களில் மூண்றாவது சமுத்திரமாகவும் உலக நீர்ப்பரப்பில் 20மூ இனை இந்து சமுத்திரம் கொண்டுள்ளதுடன் தென்முனையில் ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளடங்கலாக 10,000 கிலோ மீற்;றர் அகலத்தை கொண்டதாகும்.
இந்து சமுத்திர பிராந்தியத்தை ஐந்து புவிசார் அரசியல் பிரதேசங்களாக பிரிக்கலாம். கிழக்காபிரிக்கா பிராந்தியம், தென் மேற்க்காசியா பிராந்தியம், தென்னாசியப் பிராந்தியம், அவுஸ்ரேலிய பிராந்தியம், என ஐந்து பிராந்தியங்களாக கொள்ளலாம். இது தென்கிழக்காசியாவையும், மத்திய கிழக்கையும் அதாவது மலாக்கா நீரினையும், அரபிக்கடலையும் இணைக்கும் சமுத்திரமாகவும் விளங்குகின்றது. இந்து சமுத்திரபிராந்தியம் அரேபியக்கடல், வங்களாவிரிகுடா, அந்தமான்கடல், ஓமான் வளைகுடா, பாரிய அவுஸ்ரேலியன் குடா, ஏடன் வளைகுடா, பசுபிக்கடல், மொசாம்பிக் கால்வாய், மலாக்கா நீரினை ஏங் கடல் சபுக் கடல், தீமோர் கடல், ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அகன்ற கடற்பிராந்தியமாகும்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் மட்டும் 47 நாடுகள் உள்ளன. இதில் 36 நாடுகள் கரையோர நாடுகளாகவும், 11 நாடுகள் இந்து சமுத்திர பின்னனி நாடுகளாகவும் காணப்படுகின்றன. இச் சமுத்திரத்தில் பல தீவுகள் காணப்படுகின்றன. ஆவைகளாவன கொக்கோ தீவுகள், இலங்கை அந்தமான் தீவுகள், மாலைதீவுகள், டிக்காகோவியிலி, மொரிஜியஸ், பிச்ரல்ஸ் தீவுகள், ஆகும். அதே நேரம் கப்பல் போக்குவரத்துக்கான பல துறைமுகங்கள் காணப்படுகின்றன. சிற்றாங் கொஸ், திருகோணமலை, கொழும்பு, அம்பாந்தோட்டை, லியா விசாகப்பட்டினம், கொச்வின் கர்வோர், நர்மாறா வோடர், தீலுகிஸ் துறைமுகம், விக்ரோரியா துறைமுகம், பூயூகென் ஆகிய துறைமுகங்கள் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் உள்ளன.
இந்து சமுத்திர பிராந்தியம் பெருமளவான சக்தி மூல வளங்களான பெற்ரோலியமும் இயற்கை வாயுவும் மிக முக்கியமானவையாகும். இவைதவிர பல தாது பொருட்களான தகரம், செம்பு, ஈயம், மற்றும் தங்கம், வெள்ளி, பிளாற்;றினம், போன்ற பெறுமதி மிக்க தாதுப்பொருட்களையும் கொண்டுள்ளதுடன் இன்று உலகில் முக்கிய சர்ச்சைக்குரிய ஓர் மூலவளமான யுரேனியம் இப்பராந்தியத்தில் உள்ள தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா பகுதிகளில் காணப்படுகின்றது. மேலும் அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா தவிர்ந்த இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் பரவலாக விவசாயப் மூலப் பொருட்கள் காணப்படுகின்றன.
மேலும் 40மூ மான எண்ணை உற்பத்திகள் குறிப்பாக பேர்சியன் வளைகுடாவிலிருந்தும் இந்தோநேசியாவில் இருந்தும் இந்து சமுத்திரத்தின் ஊடாக ஏனைய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மலாக்கா நீரினை உலகத்தில் இரண்டாவது கடல்வழிப்பாதையாகும். யப்பானுக்கான எண்ணை விநியோகத்தில் 80மூ மும் சீனாவுக்கான எண்ணை விநியோகத்தில் 60மூ மும் மலாக்கா நீரினை ஊடாக இடம்பெறுகின்றன. 70 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மசகு எண்ணை ஒவ்வொரு வருடமும் இந்த நீரினை ஊடாக எடுத்துச் செல்லப்படுகின்றன. உலக நாடுகளுக்கு கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்களில் ஏறக்குறைய அரைப்பங்கு இவ் வழியாலையே ஏற்றி இறக்கப்படுகின்றன. அத்தோடு இப்பிராந்தியம் பெரும் சந்தை வாய்ப்பினை கொண்டதாகும்.
மேற் கூறப்பட்ட தன்மைகளின் அடிப்படையில் பார்க்கும் போது இந்து சமுத்திரம் இன்றைய புதிய உலக ஒழுங்கில் என்றும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. இதனாலையே.. “ யார் இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துவார்களோ அவர்களே ஆசியாவை கட்டுப்படுத்துவார்கள் இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்து மகா சமுத்திரமே ஏழு கடல்களின் திறவு கோலாக விளங்கும் அதுவே உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் மகா சமுத்திரமாக விளங்கும்” எனக் கூறுகின்றார்கள்.
இந்து சமுத்திரம் பொருளாதார ரீதியிலும் தொடர்பாடல் ரீதியிலும் மற்றும் பாதுகாப்பு ரீதியிலும் பெற்றுள்ள முதன்மை இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை எடுத்தியம்புகின்றது. இத்தகைய தொரு நிலமையில் இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை ஆராய்வதன் ஊடாக உலக அமைதி, உலக சமாதானம், உலக பாதுகாப்பு, உலக பொருளாதார போட்டி ஆகிய அம்சங்களை நிகழ்காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்சியா போன்ற நாடுகளிலும் முன்னெடுத்து செல்லப்படும் என்பதனை எதிர்வுகொள்ளக்கூடியதாகவுள்ளதுடன், அத்தகையதொரு அம்சம் இந்து சமுத்திர பிராந்தியத்தை ஒட்டியதாக நடைபெறவுள்ளது என்பதனை அண்மைக்கால அமெரிக்க சீன நகர்வுகளின் ஊடாக அறியக் கூடியதாக உள்ளது.
தொடரும்........
மீண்டும் பகுதி 03 இல் இணைவேன்.



