![]() |
| Add caption |
புதிய உலக ஒழுங்கு என்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒர் ஒழுங்கு முறையாகும். 1945 ம் ஆண்டு 2ம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததைத்தொடர்ந்து ஒர் புதிய சர்வதேச சூழலும் புதிய அரசியல் பொருளாதார ஒழுங்கமைப்பும் தோற்றம் பெற்றன. அதுவரை காலமும் இருந்த காலனிதித்துவம் தோல்வி காணவே நவகாலனித்துவம் என்படுகின்ற புதிய ஏகாதிபத்தியம் தோற்றம் பொற்றது.இப் புதிய ஏகாதிபத்தியத்தின் தலைமை அரசாக அமெரிக்கா முன்வந்துள்ளது. இவ்வாறான அமமெரிக்கா தலைமையிலான மேற்கைரோப்பிய நாடுகள் நவகாலனித்துவ ஆதிக்க அரசுகளாயின.
இந்த நவகாலனித்துவ ஆதிக்க அரசுகளின் அணியே 1949 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்ட்ட நேட்டோ என்கின்ற இவ் அமைப்பு வலதுசாரி எனப்படுகின்ற முதலாளித்துவ சிந்தனையை சித்தாந்தமாக கொண்ட பலம் வாய்ந்த இராணுவ கூட்டமைப்பாகும். அதேவேளை மாக்ஸிச சிந்தனையை அடிப்படையாக் கொண்ட சோவியத் யூனியன் தலைமையிலான Warsaw 1955 ல் உருவாகியது . இவ் அமைப்பு சித்தாந்த ரீதியான உறவை விட புவிசார் அரசியலின் ஆதிக்கப் போட்டி காரணமாக புதிய சூழலுக்கேற்ப தனக்கென புதிய உத்திகள் எதனையும் வகுக்காது செயலிழந்து போன அமைப்பாகவே காணப்படுகிறது.
புதிய உலக ஒழுங்கின்படி பல அரசுகளை விட சக்திவாய்ந்த பல்தேசிய கம்பனிகள் தேசிய எல்லைகளைக் கடந்த வங்கிகள் IMF,IBRD
போன்ற நிறுவனங்கள் அமெரிக்க ஜரோப்பி யூனியன் ஆகிய நவகாலனித்துவ அரசுகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது .
ஹின்ற் கீசிங்கரின் கருத்துப்படி “உலக மானது தான் விரும்பியபடி மாறிக்கொண்டு போகும் நிலைமையை மாற்றி முழுஉலகத்தையும் அமெரிக்கா தனது விருப்பத்திற்கு மாற்றி அமைக்கும் நிலமை புதிய உலக ஒழுங்கு” என்றார்.
இன்றைய உலக நாடுகளில் பிராந்திய நாடுகளின் முரண்பாடான நலன்களும்,போட்டிகளும் ,ஒவ்வாத்தளமைகளும் மலிந்தே காணப்படுகின்றன. இப் பிராந்திய நாடுகள் தமக்கிடையே அரசியல் பொருளாதார நலன்களையும் தொடர்புகளையும் பேணுதல் என்பதனை விட அமெரிக்க ஜரோப்பிய நாடுகளுடனேயே தமது அரசியல் பொருளாதார தொடர்புகளை பேணுதலில் கவனம் செலுத்துகின்றன. இதுவே பிராந்திய அரசுகளின் பொருளாதார வளா்ச்சி பின்னடைவதற்கும் மட்டுப்படுவதற்கும் காரணமாக இருப்பதுடன் முரண்பாடான போட்டிச் சூழலினை ஏற்படுத்துகின்றமையை அவதானி்கலாம்.
இப் புதிய உலக ஒழுங்கில் பொருளாதார நிலையில் அமெரிக்கா ,சீனா ,யப்பான், ஐரோப்பிய யூனியன் ,ரஸ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பன்முகத்தன்மையை பெற்றுக் காணப்படும் அதேவேளை ஐக்கிய அமமெரிகா அரசியல் கோட்பாட்டிற்குள் “ஏக வல்லரசு” நிலையினை அடைந்ததுடன் ஒரு முனை அரசியல் கோட்பாட்டுக்குள் உலகம் கொண்டுவரப்பட்டது. பனிப்போரின் பின்னர் தோற்றம் பெற்ற “பூகோள மயமாதல் ” ஆதிக்கமுடைய பொருளாதார தந்திரோபாயத்தினை வெளிப்படுத்திருந்தது .
ஐக்கிய அமெரிக்கா அறிமுகப்படுத்திய பூகோளமயமாதல் கோட்பாட்டை சர்வதேச மக்கள் ஏற்றுக்கொளவதன் மூலம் செழிப்பான வாழ்கையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டது . விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச நாடுகள் பூகோளமயமாதல் கோட்பாடபாட்டை ஏற்றுக் கொள்ள வேணடியிருந்தது. இக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற நாடுகள் மீது வெளிப்படையானதும் இரகசியமானதும்மான அரசியல் பொருளாதார இராஜதந்திர அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. சில நாடுகள் மீது படைப் பிரயோகங்கள் கூடப் பிரயோகிக்கப்பட்டன.உதாரணமாக ஈராக் ,லிபியா.
சர்வதேச நாடுகள் புகோளமயமாக்கல் கோட்பாட்டினை ஏற்றுக்கொள்வதன் மூலம் அமெரிக்கா ஏக வல்லரசு என்ற தன்மையை பெறுவதுடன் அதனை தொடர்ந்து பேணுவதிலும் மிகுந்த அக்கறை காட்டி வருகின்றது. இந்துசமுத்திரம் ,இலங்கை மீதான ஆதிக்கம் இதனையே எடுத்துகாட்டுகின்றன.
பொதுவாக USAபின்வரும் விடயங்களை சாதிப்பதன் மூலம் ஏக வல்லரசு என்ற நிலையை அடைய முனைகிறது .
1) தனது பொருளாதார நலன்களை உலகளாவிய சர்வதேசரீதியில் விஸ்தீரணம் செய்துகொண்டு உலக நாடுகளை தன்னிற் தாங்கி நிற்கச்செய்தல்.
2) இராணுவ மேலாண்மையை தொடர்ந்து பேணுதல்
3) புவிசார் அரசியல்ரீதியில் சமபலத்தை பேணுதல்
4)முழு உலகிற்கும் எல்லா வகையிலும் தலைவனாதல்.
தொடரும்.........

No comments:
Post a Comment