Tuesday, 24 July 2012

சர்வதேச சட்டமும் சட்டமூலங்களும்

மனித சமுதாயத்தில் சட்டங்களும் நியதிகளும் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றன.  சமதாயக் கட்டுக்கோப்பிற்கும் அமைதியான வளர்ச்சிக்கும் சமுதாய நியதிகளும் கோட்பாடுகளும் உறுதுணையாக விளங்குவதாகச் சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.  இந்த நியதிகள் பன்னெடுங்காலமாகப் பலராலும் பரிசோதிக்கப்பட்டும் பயன்படுத்தியும் வந்திருக்கின்றன.  எனவே சமுதாயக் கட்டுப்கோப்பிற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதனவாகச் சட்டங்கள் உள்ளன.  அதுபோல் சர்வதேச அரசியல் நடைமுறைகளிலும் இத்தகைய நியதிகளும் சட்டங்களும் உருவாகின. 

ர்வதேச அரங்கில் இன்று ஒரு நாடு மற்றொரு நாட்டுடனும் தொடர்பில்லாமல் வாழ முடியாது.  தொடர்புகள் இருந்தால் தொல்லைகள், மோதல், முரண்பாடுகள் முளைப்பது இயற்கை.  இத்தகைய மோதல், முரண்பாடுகள் உலகையே சீர்குலைக்கின்றன.  “நாடுகள்
பூசல்கள் ஒழித்து அமைதியாக வாழச் சில விதிகளைக் கடைப்பிடிக்கின்றன.  இவ்விதிகள் நாடுகளுக்கு நீதியை வழங்க வல்லன என்று கருதப்படுகின்றது.  இவ் விதிகளே சர்வதேசச் சட்ட விதிகள் எனப்படுகின்றன”.  

    ஒரு நாட்டிலுள்ள மக்களும், அமைப்புக்களும் நிறுவனங்களும் அந்நாட்டுச் சட்டத்திற்கும் நியதிகளுக்கும் உட்படுகின்றன.  அதேபோன்று சர்வதேசச் சட்டங்களுக்கு தேசிய அரசுகளும் பல்தேசிய நிறுவனங்களும் சர்வதேச விவகாரங்களில் ஈடுபடும் மனிதர்களும் உட்படத்தப்படுகின்றார்கள்.  ஆனால் பொதுவாக சர்வதேசச் சட்டங்கள் சர்வதேச அரசியலில் பங்குகொள்ளும் நாடுகளுக்கு உரித்தானவையாகும்.  ஆகவே இதனைச் சர்வதேசப் பொதுச் சட்டங்கள் என்றும்,சர்வதேச தனியார் சட்டங்கள் என்றும் வகைப்படுத்தினர்.

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து அவற்றிடையே தொடர்புமிருந்தால் சர்வதேசச் சட்டம் தேவைப்படுகின்றது.  கி.மு.400 இலேயே எகிப்துக்கும் சேடா (
Cheta)  என்ற நாட்டுக்கும் இடையே ஒரு உடன்படிக்கை இருந்ததுக்குச் சான்றுகள் இருக்கின்றன.  அக்காலத்தில் போர்விதிகளே பெரிதும் இடம்பெற்று இருந்தன. 

திருக்குறளில் ரசியல் அமைச்சியல் என்ற பகுதிகளில் அரசர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் கூறப்பட்டுள்ளன.  அர்த்தசாஸ்திரத்திலும் அரசன் மற்ற அரசர்களைப் பொறுத்து கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

வழக்கத்திலிருக்கும் சர்வதேசச் சட்டம் கடந்த 400 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளிடையே இருந்த பழக்க வழக்கங்களின் அடியாகப் பிறந்ததாகும்.  பல சட்ட நிபுணர்களும் விளக்க நூல்கள் எழுதி இதன் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார்கள்.

இந்தவகையில் சர்வதேசச் சட்டத்திற்கான தொகுப்பு என்ற வகையில் 1492ஆம் ஆண்டிற்கும் 1546ஆம் ஆண்டிற்குமிடையில் வாழ்ந்த 
Francisco Devitoria  1548 ஆம் ஆண்டுக்கும்  1617ஆம் ஆண்டுக்கு  ம் இடையில் வாழ்ந்த  (பிறான்சிஸ்கோ சோறிஸ்Francisco Suarez ஆகிய ஸ்பானிய சமயக் கோட்பாட்டாளர்கள் யுத்தம் காலனித்துவ உருவாக்கம் போன்றவற்றிற்கான சட்டத் தொகுப்புக்களை வெளியிட்டு இருந்தனர்.  இதேபோன்று 1552 – 1608 க்கும் இடையே வாழ்ந்த Alberico Gentili 
ஒப்பற்ற சட்டங்களிலுள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறியிருந்தார். 

ஆயினும் 1583 ஆம் ஆண்டிற்கும் 1645ஆம் ஆண்டிற்கும் இடையில் வாழ்ந்த சர்வதேசச் சட்டத்தின் தந்தையான 
Hugo Grotius (ஹாகோ குரோலியஸ்)  வழங்கிய பங்களிப்பு முக்கியமானது ஆகும்.  1609ஆம் ஆண்டு Freedom of the sea   என்ற தலைப்பில் முதல் சர்வதேசச் சட்ட நூலினை வெளியிட்டு இருந்தார்.  1625ஆம் ஆண்டு (De Jure  belli ac pacis) “போர்க்கால அமைதிக்கால விதிகள்” என்ற நூலை வெளியிட்டு இருந்தார்.  சர்வதேசச் சட்டத்தின் பிற்கால வளர்ச்சிக்கு இந்த நூல் அடித்தளமாக அமைந்தது என்றால் மிகையாகாது.  குரோரியஸ் சர்வதேசச் சட்டத்தினை இயற்கைச் சட்டம், உடன்பாட்டுச் சட்டம் அல்லது நம்பிக்கைச் சட்டம் என இரண்டாகப் பிரிக்கின்றார்.  உடன்பாட்டுச் சட்டத்துக்கு உதாரணமாக மரபுரீதியான சட்டங்கள் வழக்காற்றுச் சட்டங்களைக் கூறிக்கொள்ள முடியும்.  




இவரின் பின்னர் Emmerich De Vattel எமரிர் டி வற்ரெல்)  என்பவர் Law of Nation என்ற நூலினை வெளியிட்டு இருந்தார்.  இந்நூலில் இவர் இயற்கைச் சட்டங்கள் இறைமையாளர்களையும் இன விவகாரங்களையும் தொடர்புபடுத்துவதாகக் கூறுகின்றார்.  இவரின் கருத்துக்கள் மற்றும் மொண்டஸ்கியூ, ரூசோ போன்றவர்கள் சர்வதேசச் சட்டத்திற்கு முற்போக்கான பங்களிப்பினைச் செய்வதற்கு உதவியிருந்தன.  

சர்வதேசச் சட்டமானது அரசுகளின் இறைமையினையும் அதனைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளையும் எடுத்துக் கூறுகின்றது.  எனவே சர்வதேசச் சட்டம் அரசுகளின் இறைமையின் நண்பன் எனக் கூறமுடியும். அரசுகளுக்கிடையில் ஒழுங்கமைக்கப்பட்ட உறவுமுறைகளைச் சர்வதேசச் சட்டம் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் சர்வதேச அரசியல் நடத்தைகளுக்கான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. 
 சர்வதேசச் சட்டம் தொடர்பாகப் பல கருத்துக்களை சட்ட அறிஞர்கள் முன்வைத்துள்ளனர்.  அவை 


    “நாடுகளிடையே எழும் உறவு முறைகளை நெறிப்படுத்தும் வழமை சார்ந்த உடன்படிக்கை வழியான விதிமுறைகளையே சர்வதேசச் சட்டம் “ என்றார் ஒப்பன் ஹெய்ம்

   சர்வதேசச் சட்டமானது “உலக முறைமைகளுக்கூடாக  மனித உறவுகளுக்கான சில விதிகளை தோற்றம் பெற வைக்கின்றது” என   
Elleryc Stowell கூறுகின்றார்.  

     
Philip C.Jessup  என்பார் 1943 இல் “பொதுவாக அரசுகளுக்கிடையிலான உறவுகளுக்குப் பிரயோகிக்கத்தக்க சட்டங்களே சர்வதேசச் சட்டமாகும் எனக் கூறியிருந்தார். 

    Prof  வென்விக் அவர்கள் பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகின்றார்.  “பொதுவாக நாடுகள் பலவற்றாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நாடுகளின் வெளித்தொடர்புகளில் நன்மை பயக்கக் கூடிய உரிமைகளும் இவற்றில் அடங்கும்.  நாடுகளின் உரிமைகள் மீறப்படும் போது பின்பற்றக்கூடிய வழிமுறைகளும் சர்வதேசச் சட்டங்களில் அடங்கும்”. என சர்வதேசச் சட்டத்தினை வரையறை தருகின்றார். 

    சுதந்த்திர நாடுகளிடையே நடப்பிலிருக்கும் விதிகளின் தொகுதி சர்வதேசச் சட்டம் எனப்படும்.  இதை நாடுகளின் உரிமைகளையும் கடமைகளையும் பற்றிய விதிகள் என்றும் கூறலாம்.  இவ்விதிகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். 


1)    அனைத்துலக விதிகள்
2)    பொதுவிதிகள்
3)    பிரத்தியேக விதிகள்


ன மூன்றாக பிரிப்பதுண்டு.  இருப்பினும் இவைகளைப் பொதுவிதிகள். வட்டார விதிகள் (
Regional rules)  என இருவகையாகப் பிரிப்பதே சிறந்ததாகும். 

 பொதுவாக எல்லா நாடுகளாலும் கடைப்டபிடிக்கப்படுபவை பொதுவிதிகள் (
General rules)  எனப்படும்.  (உதாரணம்:  தூதராலய விதிகள்)  சில நாடுகளில் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருக்கும் நாடுகளால் கடைப்பிடிக்கப்படும் விதிகள் வட்டார விதிகள் அல்லது பிரத்தியேக விதிகள் எனப்படும்.  உதாரணம் மன்றோ கோட்பாடு.  எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றலுடைய விதிகள் அனைத்துலக விதிகள் எனபப்டும்.  உதாரணம்: ஐக்கிய நாடுகள் சபை சாசனம்.  இவற்றை அமைதிக்கால விதிகள்இ போர்க்கால விதிகள் என இருபெரும் பிரிவுகளாகப் பிரிப்பது உண்டு.  

சர்வதேச அரசியலில் சட்டங்கள் வகிக்கும் நிலைபற்றி விரிவாக ஆராய்ந்த Prof:. ஜோக் சுவர்ஸன்பேர்ஜர்   அவர்கள் மூவகைச் சட்டங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றரர்.  


1)    அதிகாரத்தினால் உயர்நிலையிலிருந்து தோன்றும் சட்டங்கள்.
19ஆம் நூற்றாண்டில் காலனித்துவ வல்லரசுகள் தமது ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்கள் மீதும்இ நாடுகள் மீதும் ஒருவகையான சட்டங்களை உருவாக்கினர்.  இவை அவர்களின் உயர்நிலையிலிருந்து பிறப்பிக்கப்பட்டவையால்; மற்றவர்களால் மீறப்பட முடியாத நிலை. 


2)    தொடர்புபடுத்தலுக்கும் ஒன்றிணைப்பதற்குமான சட்டங்கள்.
இவை தேவையின் அடிப்படையில் இனம்காணப்பட்ட சமூகங்களுக்கிடையில் உருவாகின்றன. 




3)    இவற்றிற்கு இடைப்பிட்ட நிலையில் அதாவது பெரும்பான்மையான சர்வதேசச் சட்டங்கள் பரஸ்பர நல்லுறவின் அடிப்படையில் உருவாகின்றன. 

ந்தவகையைச் சார்ந்தவைதான் ராஜதந்திர செயற்பாட்டில் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட வெளியுறவுச் சட்டங்கள்,அகதிகள் பற்றிய சட்டங்கள் குற்றவாளிகளை நாடு கடத்தும் சட்டங்கள் என்பன. 

 இவ்வகையில் சர்வதேசச் சட்டம் சட்டம் தானா? என்ற கேள்வி நாட்டிடைச் சட்டம் உருவாகிய காலம் தொட்டு இக்கேள்வி கேட்கப்பட்டு காலத்திற்குக் காலம் சூழ்நிலைக்கேற்ப பதிலும் இறுக்கப்பட்டு வந்துள்ளது. 

 
Hobbes. Pufendorf, Austin ஆகிய சட்ட மேதைகள் இவற்றைச் சட்டவிதிகளாகக் கருத இயலாது என்றனர்.  ஆஸ்டின் சர்வதேசச் சட்டவிதிகளை நாடுகளின் நடவடிக்கைகள் குறித்த “அறநெறிக் கருத்துக்களின் தொகுதி” எனக் கூறினார். Austin  சர்வதேசச் சட்டம் ஒரு வரம்பில்லா அதிகாரம் பெற்ற அரசியல் தலைவர் அல்லது அரசரால் ஏற்படுத்தப்பட்டதல்ல.  அதை அமுல் நடத்தும் அதிகாரம் பெற்ற வரும் இல்லை.  எனவே Austin கொள்கைப்படி சர்வதேசச் சட்டவிதிகள் சட்டம் ஆகாது என்றார்.  

 ஆனால் சட்டம் என்பதற்கு ஆஸ்டின் கொடுத்த விளக்கம் சரியானதல்ல என்று சரித்திரபூர்வ சட்டவியல் (Historical Juries Prudence)  நிரூபித்து விட்டது.  மேலும் சர்வதேசச் சட்ட விதிகளை எல்லா நாடுகளும் ஒத்துக்கொண்டு இருக்கின்றன.  சர்வதேச நீதிமன்றத்தின் விதித் தொகுதியில நீதிமன்றம் வழக்கொன்றை சர்வதேசச் சட்ட விதிகளுக்கு இணங்க விசாரித்து முடிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

சர்வதேச சட்ட விதிகளை மீறிய நாடுகள் கூட அவ்விதிகள் சட்ட விதிகள் அல்ல என்று வாதாடியதுமில்லை.  கூறியதுமில்லை.  தமது நடவடிக்கை வேறொரு விதியின்படி சரியானது என்று நிரூபிக்க முயல்கின்றன என்பதும் நோக்கத்தக்கது.  மேலும் சர்வதேசச் சட்டத்தை அமுதல்படுத்தும் அதிகாரம்
ஓரளவுக்கு  ஐக்கியநாடுகள் அமைப்புக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. 
அந்தவகையில் நாட்டிடைச் சட்டத்தின் மூலங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுக் கொள்ளலாம்.  


1)    சர்வதேசப் பழக்க வழக்கங்கள்.
2)    சர்வதேச உடன்படிக்கைகள்
3)    நாகரிக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பொது விதிகள்.
4)    நீதிமன்ற முடிவுகள்.
5)    சட்ட மேதைகள் சர்வதேச நீதிபதிகளின் கருத்துக்கள்.
6)    சர்வதேசச் சம்மேளனங்கள் பிரகடனப்படுத்தும் தீர்மானங்கள்.

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த மூலங்கள் உலக நீதிமன்றத்தைத் தோற்றுவித்துள்ள அமைப்பு சட்டத்திலும் (
Statute of International court of Justice )  பிரிவு (38) இல் அங்கீகரிக்கப்பட்டது.  

 அதில் கூறுவதாவது உலக நீதிமன்றம் தன் முன் வரும் வழக்குகளைக் கீழ்க்கண்ட சட்ட மூலங்களில் காணப்படும் நாட்டிடைச் சட்ட விதிகளின் அடிப்படையில் நிரணயிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.


1)    உலக அரங்கில் நாடுகள் செய்துகொள்ளும் உடன்படிக்கைகள் 
(International Treaties)
 
2)    நாடுகளுக்கிடையே சட்டத்தின் தன்மையைப் பெற்றுவிட்டதற்குச் சான்றாகச் சொல்லக் கூடிய உலக வழக்கங்கள் 
  (International costume as evidence of a general practice accepted as law


3)    நாகரிகமடைந்த அரசியல் அமைப்புக்களுடன் விளங்கும் நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள பொதுவான சட்ட நெறிக் கொள்கைகள்.  (The general principles of Law recognized by civilized nations)
4)    பல்வேறு நாட்டின் சட்டத்தில் தேர்ச்சி பெற்ற பெரும் அறிஞர்கள் ஆய்வுரைக் கருத்து விளக்கங்களையும் நீதிமன்றத் தீர்ப்புக்களையும் மேற்கூறிய மூலங்களுக்கு துணை மூலமாகக் கொண்டு சட்டவிதிகளை நிர்ணயிக்கப் பயன்படுத்தலாம். (Judicial decisions and the teachings of the most highly qualified publicists of the various countries as subsidiary means for the determination of rules of law) 


1)    சர்வதேச பழக்க வழக்கங்கள்
       

நாட்டிடைச் சட்டம் நாடுகளின் பொது ஒப்புதலையே அடிப்படையாகக் கொண்டு அமைந்தது.  அந்தப் பொது ஒப்புதல் எக் காரணங்களால் நடைமுறைக்கு வந்ததோ அவையெல்லாம் சர்வதேசச் சட்டத்தின் மூலங்களாகும்.  எனவே நாட்டிடைச் சட்டத்தின் முதன்மையான மூலங்கள் இரண்டு ஒன்று நாடுகள் தங்கள் வெளிப்படையான ஒப்புதலைத் தெரிவித்து ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கை மற்றும் உட்கிடையான ஒப்புதலை (Implied consent) தெரிவித்துக் கொள்ளும் வகையில் சட்ட விதியை போன்றே நாடுகள் வழங்கிவரும் உலக வழக்கத்தைத் தாமும் நடைமுறையில் ஏற்று நடப்பது வழக்கு விதி எனப்படும்.  நாட்டிடைச் சட்டத்திற்கு மட்டுமன்றி பொதுவாக எல்லாச் சட்டங்களுக்கும் வழக்கு விதிகள் முதன்மையான மூலமாகும். 

2)    உடன்படிக்கைகள் 
(Treaties)

உடன்படிக்கைகள் இரண்டு வகைப்படும். 1)     சட்டங்களை உருவாக்கும் உடன்படிக்கை
2)    நாடுகளிடையே கடப்பாட்டு ஒப்பந்தங்களுக்காகச் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை.

சட்டத்தினை உருவாக்கும் உடன்படிக்கை 2 வகைப்படும்.  முதலாவது உலகு அனைத்திற்கும் பொருந்தக்கூடிய நாட்டிடைச் சட்டத்தைத் தோற்றுவிக்கும் உடன்படிக்கைகள்.  உதாரணம்: ஐக்கியநாடுகள் சாசனம்.  இரண்டாவது பொதுத்தன்மையுடன் கூடியதாகவோ பொதுவாக விதிகளை வெளிப்படுத்துவதாகவோ மட்டும் அமையும் உடன்படிக்கைகள்.  உதாரணம்: வடகடல் கண்டத்திட்டு வழக்கு 
(North Sea continental shelf  case)       இவ்வழக்கு 1969 இல் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு. 

கடப்பபாட்டு ஒப்பந்த உடன்படிக்கைகள் இவ்வகை உடன்படிக்கைகள் நாட்டிடைச் சட்ட நேரடி மூலங்களாகக் கருதப்படுவதில்லை.  இருந்தாலும் சிலவேளைகளில் அவை நாட்டிடைச் சட்டவிதிகளை உருவாக்க உதவுகின்றன.

3)    நாகரிகமடைந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவிதிகள்
 

இதற்கு உதாரணம் “சார்சாவ் பேக்டரி வழக்கு (ஊhழசணழற கயஉவழசல ஊயளந) இவ்வழக்கில் நாடுகளில் உள்நாட்டு சட்டத்தில் வழங்கிவரும் “மறுதீர்ப்புத் (Re & Judicatal) தடைக்கொள்கை செயற்படுத்தப்பட்டது. 

4)   சட்ட வல்லுனர்களினாலும் சர்வதேச நீதிபதிகளின் கருத்துக்கள்.

நாட்டிடைச் சட்டம் ஒரு சில பெரும் சட்டச் சான்றோர்களின் சிந்தனைத் தெளிவின் தத்துவச் சாரமே ஆகும்.  இதற்கு உதாரணமாக  ஹியூகோ குரோரியஸ், விக்டோரியா, வேட்டல்,சாக்கே போன்ற பன்னாட்டுச் சட்ட வல்லுநர்களின் சட்டபாணியைக் கூறலாம்.  

5)    பல்வேறுபட்ட நீதிமன்றங்கள் நியாயக் குழுக்களின் தீர்ப்புக்கள்

 உலக அரங்கில் செயல்படும் நீதி மாற்றங்களும் நியாயக் குழுக்களும் ஒன்றையொன்று பின்பற்றி தீர்ப்பை வழங்கும் வழக்கங்களைக் கொண்டிருப்பதால் அவை நாளடைவில் பன்னாட்டுச் சட்டத்தின் தன்மையைப் பெறலாம். 

சர்வதேச சட்டங்கள் இவ்வாறு பல்வேறுபட்ட நிலைகளிலிருந்து உருவாக்கப்பட்டாலும் அவற்றை அமுல் செய்வதில் இறுக்கமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.  முதலில் சர்வதேசச் சட்டங்கள் பெரும்பாலும் நாடுகளின் விருப்பில் இயற்றப்பட்டதால் அவற்றைப் பின்பற்றுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் சம்பந்தப்பட்ட நாடுகள் நாட்டம் கொண்டுள்ளன.  மேலும் சர்வதேச அபிப்பிராயத்திற்கு பயந்தும் பிற அரசுகளின் எதிர் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காகவும் சர்வதேச சட்டங்கள் பெருமளவுக்குப் பின்பற்றப்படுகின்றன.  இச் சட்டங்களை சர்வதேச நீதிமன்றம் நிர்வகித்து வருகின்றது.

சர்வதேச சட்டமானது தன்னகத்தே சில குறைபாடுகளைக் கொண்டு காணப்படுகின்றது. 


1)    சர்வதேச சட்டத்தின் முதல்குறை அதன் விதிகள்.  திட்டவட்டமாக வரையறுக்கப்படாமல் இருத்தல். ஒரு காலத்தில் பயன்பட்டது.  மற்றொரு காலத்தில் பயன்படுவதில்லை. பழையன கழித்து புதியன புகுத்த சர்வதேச அரங்கில் திட்டவட்டமான அமைப்பு இல்லை.  சர்வதேச சட்டவிதிகள்இ நாட்டு நடப்பாலும் சர்வதேச நீதிமன்ற முடிவுகளும் காலப்போக்கில் செப்பனிடப்பட வேண்டியவை. 


2)    சர்வதேச சட்டத்தை அமுல் நடத்தும் அமைப்ப பற்றியது.  வல்லரசுகள் சிற்றரசுகளால் வேறுபாடு இன்றி எடுத்த முடிவை நிலைநிறுத்தும் அதிகாரமும் வலிமையும் பொருந்திய அமைப்ப இருப்பதாகச் சொல்ல முடியாது.  


3)    இஸ்லாமிய கலாசாரத்துக்கு எதிராகவும் வளர்முக நாடுகளை சுரண்டுவதற்கு ஏதுவாக சர்வதேசச் சட்டம் இருப்பதாகச் சிலரால் கூறப்படுகின்றது.


போரை ஒழித்து அமைதியை நிலைநாட்ட மேற்சொன்ன குறைபாடுகளுக்கு பரிகாரம் தேடவேண்டும். மேலும் 
U.N.O.;கூட்டுப்பாதுகாப்புக் கொள்கையினை நிறுவன மயப்படத்தியதால் சர்வதேசச் சட்டங்களுக்கும் அதனை நிர்வகிக்கும் சர்வதேச நீதிமன்றத்துக்கும் உச்ச மதிப்பு ஏற்பட்டுள்ளது.  Prof. பிலிப்ஜேசுப் தனது “நாடுகளுக்கிடையிலான நவீன சட்டங்கள்” என்ற நூலில் சர்வதேசச் சட்டங்களை நிருவகிப்பதில் U.N.O.;மிகத் தீவிரமாக செயற்பட வேண்டும் என்றார்.  இதற்ன ஐ.நா.விற்கு ஒரே நிரந்தரமான காவல் படை இன்றியமையாததாகின்றது.  



இன்றுள்ள நிலையில் பெரும்பாலும் பாதகமான விளைவுகளே ஏற்படுகின்றன.  வலுவுள்ள அரசுகள் சர்வதேச சட்டங்களை மீறும்போது வலுவற்ற நாடுகளுக்கு உதவ சர்வதேச சட்டங்களோ அன்றி அமைப்புக்களோ சக்தியற்று காணப்படுகின்றன.  எனவே சர்வதேசச் சட்டங்களை ஒருமுகப்படுத்துவதற்கும் அவற்றை நிருவகிப்பதற்கும் படிமுறை அமைப்பு முறையில் சர்வதேச நீதி மன்றங்களை அமைப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்.  இதற்கு ஐ.நா. அமைப்பு அதிகார அரசியல் நிலையிலிருந்து விடுபட்டு சர்வதேச சமூகத்திற்கு நீதி நியாயத்திற்கும் கட்டுப்பட்ட அமைப்பாக மாறுவதும் சர்வதேச அபிப்பிராயத்துக்கு மதிப்பளிப்பதும் இன்றியமையாததாகும்.  மேலும் புதிய நாட்டு அங்கீகாரத்தையும் சர்வதேச நீதிமன்றமே பரிசிலித்து வழங்க வேண்டும்.  சர்வதேச அரங்கில் நேர்மை நிலவ ஆவன செய்ய ஒரு சர்வதேசச் சட்டமன்றம் தேவை இதை விருப்பு வெறுப்பற்ற ஒரு சர்வதேசச் சட்ட குழுவுக்கு(International Law commission) விடலாம். 

எண்ணெய் வள அரசியல் + கனியவள அரசியல் ஸ்ரீ பயங்கரவாதத்துக்கெதிரான போர்!

எண்ணெய் வள அரசியல் + கனியவள அரசியல் பயங்கரவாதத்துக்கெதிரான போர்!


9.11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தை உலகளவில் தொடக்கி இருந்தது. பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம் என்பது பல்வேறு வாதப்பிரதிவாதங்களை உலகளவில் ஏற்படுத்தி இருந்தபோதும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஒரு தலைப்பட்சமாகவே அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்றன. பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்பது மேற்கின் நவகாலனிய வடிவமோ என சந்தேகிக்கும் அளவுக்கு இன்று அது எங்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

9.11 தாக்குதலின் சூத்திரதாரி என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டும் அல்-கைதா இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை பிடிப்பதை காரணமாக கூறியே அமெரிக்கா 2001 ல் ஆப்கானை ஆகிகிரமித்ததை நாம் அறிவோம். (இதுவே அமெரிக்காவின் பயங்கரவாத்துக்கெதிரான? முதலாவது யுத்தம்) ஆனால் ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின்; வெளிப்படையான காரணங்களுக்குப் பின்னால் எப்போதும் மறைமுக அமெரிக்க நலன்சார் அரசியல் அதன் ஒவ்வொரு ஆக்கிரமிப்புக்குப் பின்னாலும் இருந்தே வந்துள்ளது. கடந்த கால அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வரலாறுகள் நமக்கு இந்த உண்மையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எண்ணெய் வள அரசியலே காரணம் என்பது ஏறத்தாழ நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். எனினும் உலகின் மிக வறிய நாடுகளுள் ஒன்றான ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குப் பின்னால் உள்ள அரசியல் இப்போது தெளிவாகி வருவது போல் உள்ளது. ஓஸாமா பின்லேடனைப் பிடிப்பதுஇ தாலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதுஇ ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது போன்ற காரணங்களே ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பின் போது அமெரிக்காவால் கூறப்பட்டவை.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னால் ஆப்கானிஸ்தான் இன்று அமெரிக்காவுக்கும்இஉலகுக்கும் வேறு வழிகளிலும் முக்கியம் பெறும் ஒரு நாடாக மாறியுள்ளது. அங்கு அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டு வரும் கனிய வள ஆய்வுகள் மற்றும் அதன் பெறுபேறுகளால் ஆப்கானிஸ்தான் உலகின் முக்கிய கனிமப் பொருள் நிறைந்த கேந்திர நிலையமாக ஆகுவதுற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் வெற்றியளித்துவரும் கனிய வள ஆய்வுகள்இஅமெரிக்கா அதன் மூலம் அடையும் புளகாங்கிதம் இவைகளை வைத்துப் பார்க்கும்போது ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் உள்ளரசியலை இன்று வேறொரு கோணத்தில் எங்களை சிந்திக்கத் தூண்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கனிய வளம்

மத்தியாசியா நாடென்றும்இ தென்னாசிய நாடென்றும் மாறிமாறி குறிப்பிடப்படும் ஆப்கானிஸ்தான் இன்று தென்னாசிய நாடுகளின் கூட்டுச் சங்கமான ‘சார்க்’ அமைப்பிலும் அங்கம் வகிக்கிறது. உலகில் மிகவும் வறுமையான நாடுகளுள் ஒன்றாக கொள்ளப்படும் ஆப்கானிஸ்தான் அதன் வரலாற்றில் தொடரும் பல்வேறு போர் நடவடிக்கைகளால் மேலும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. போர்இவறுமைஇஊழல்இஅடிப்டைவாதம் என்பனவே இன்றைய ஆப்கானிஸ்தானின் பொது அடையாளமாக உள்ள நிலையில் ஆச்சரியமளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் கனியவளம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் ஆய்வுகளிலிருந்து ஆப்கானிஸ்தான் ஒரு கனிய வளங்கொழிக்கும் நாடு என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கனியவளம் குறித்த கண்டுபிடிப்பு அண்மையில் கண்டறியப்பட்ட ஒரு விடயமல்லஇ ஆப்கானிஸ்தான் உலகுக்குத் தேவையான முக்கியமான கனியவளங்களைக் கொண்ட நாடு என்ற உண்மையை 1980 களிலேயே அறிய முடியுமாக இருந்தது. 1980 களில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது சோவியத் புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆப்கானிஸ்தானில் கனிய வள ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தானின் சில பாகங்களில் அவர்கள் மேற்கொண்ட கனிப்பொருள் வள ஆய்வுகளின்போது அவர்களால் அது குறித்து பல்வேறு தகவல்களை சேகரிக்க முடிந்தது. 1989ல் சோவியத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஆப்கானிஸ்தானின் புவியியல் ஆய்வாளர்கள் சிலர் அந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாலிபான்களின் ஆட்சியை கவிழ்த்த பிறகு அவர்கள் அந்த தகவல்களை மீண்டும் காபூலிலுள்ள புவியியல் ஆராய்ச்சி நூலகத்திற்கே கையளி;த்ததாக கூறப்படுகிறது.

2004ல் ஆப்கானிஸ்தானின் ஓர் எல்லைப் பகுதியின் மீள்கட்டுமாணப் பணிகளுக்காக அமெரிக்க புவி ஆராய்ச்சியாளர்களின் ஒரு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். காபூலிலுள்ள புவியியல் ஆராய்ச்சி நூலகத்தில் இது பற்றிய தகவல்கள் மற்றும் வரைபடங்கள் போன்றன அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தன.

இதையடுத்து 2006 ல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவினால் கனியவள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சோவியத் யூனியனின் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருந்த அந்த கனியவள ஆய்வுகளின்போது சேகரிக்கப்பட்ட தகவல்களை முக்கிய உசாத்தணையாகக்கொண்டே அமெரிக்க புவியில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வினைத் தொடங்கினர்.இக்கனியவள ஆய்வுகளின் விளைவாக ஏறத்தாழ 1 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கனிமப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுவரை ஆப்கானிஸ்தானில் அறியப்படாமலிருந்த பாரிய கனிய வளங்கள் இந்த ஆய்வுகளின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பின்வரும் கனிய வளங்கள் இதில் கண்டறியப்பட்டுள்ன.

கனியம் காணப்படும் இடங்கள்


செம்பு- இக்கனியம் ஹெராத்இ ஃபராஹ்இ கபிஸாஇ கந்தகார்இ சபுல் போன்ற மாகாணங்களில்; காணப்படுகிறது

தங்கம்- தகார் மற்றும் பதாக்ஸான் போன்ற மாகாணங்களில் காணப்படுகிறது.

இரும்புத்தாது -பாமியன் மாகாணத்தில் காணப்படுகிறது

மாணிக்கக் கல் -ஜெஜலக்இ பதாக்ஸான்இநூரிஸ்தான்இ பன்ஜிர் பள்ளத்தாக்கு

பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு- வடக்கு ஆப்கானிஸ்தான்

மேலும் கைத்தொழில் துறையை விருத்தி செய்வதற்குத் தேவையான லித்தியம் போன்ற மிகவும் மதிப்ப வாய்ந்த உலோகப் பொருட்களும் இக் கண்டுபிடிக்கப்பட்ட கனிப்பொருட்களில் அடங்குகின்றன.

ஆப்கானைப் பொறுத்தவரை இக்கனியவள கண்டுபிடிப்புக்கள் ஆப்கானின் சமூக-அரசியல்-பொருளாதாரத் துறைகளில் நேர் மறையானதும் எதிர்மறையானதுமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை..உலகின் மிக வறுமையான நாடுகளுள் ஒன்றாக ஆப்கான் விளங்குகிறது. ஆப்கானின் பொருளாதாரரீதியான புள்ளிவிபரங்களின்படி அங்கு 2ஃ3 வீதமான மக்கள் நாளொன்றுக்கு 2 அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தையே பெறுகின்றனர். அதேநேரம் வேலையில்லா வீதம் மிக அதிகரித்த அளவில் காணப்படுகிறது. போதாக்குறைக்கு அது தொடராக சந்தித்து வந்த போர் நடவடிக்கைகள் காரணமாகவும் அதன் பொருளாதாரம் மேலும் நலிவடைந்துள்ளது. இந்நிலையில் இக்கனிய வளக் கண்டுபிடிப்பானது ஆப்கானின் பொருளாதாரத்தை மேம்படுத்த நிச்சயம் உதவும்.

ஆப்கானின் கனியவள அமைச்சின் ஆலோசகர்களில் ஒருவரான கலீல் ஜூம்ரைனி “ஆப்கான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இது மாறும்” என்கிறார். சர்வதேச கனிப்பொருள் வர்த்தக சந்தையில் ஆப்கானுக்கும் ஒரு நல்ல இடம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. இன்று ஆப்கானுக்கு இது தொடர்பிலான நிபுணத்துவ ஆலேசனைகளை வழங்குவதற்காக பென்டகன் ஒரு சிறப்புக் குழுவையும் அமைத்துள்ளது.அதேநேரம் இக்கண்டுபிடிப்பானது ஆப்கானில் எதிர்மறையான சில விளைவுகளுக்கும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இது நாட்டில் அமைதிக்கு பதிலாக முரண்பாடுகளையே தோற்றுவிக்கக்கூடிய நிலையும் காணப்படுகிறது.இக்கனிய வளங்கள் காணப்படும் மாவட்டங்களில் மத்தியரசு-மாநில அரசுகள் மற்றும் கிளர்ச்சிக் குழுத் தலைவர்கள் போன்றவர்களுக்கிடையில் முடிவற்ற நீண்ட தொடர்ச்சியான மோதல்களையும் இது தோற்றுவித்துள்ளது. இன்னொரு புறம் தாலிபான்கள் மீண்டும் நாட்டைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குத் தீவிரமாக போராடக்கூடிய நிலையும் தோன்றியுள்ளது. அது தவிர ஏற்கனவே ஊழல் மலிந்து காணப்படும் கர்ஸாயி அரசாங்கத்தில் இது மேலும் பல சீரழிவுகளுக்கு வழிவகுக்கவும் கூடும்.

கனிய வளங்களும் அமெரிக்காவின் புளகாங்கிதமும்.

உண்மையில் ஆப்கானில் வெற்றியளித்துள்ள கனிய வள ஆய்வுகள் அமெரிக்காவை மிகவும் புளகாங்கிதத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆப்கானைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து அதன் கனிய வளங்களை சூறையாடும் ஒரு ஏகாதிபத்திய சுரண்டலையே ஆப்கான் மீது அமெரிக்கா பிரயோகிக்கப்போகிறது. அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டு வரும் கருத்துகளும் அவர்களின் சில நடவடிக்கைளும் அமெரிக்காவின் இந்த நோக்கத்தை வெளிப்படையாக்கியுள்ளன. அமெரிக்கப்படைகளின் மத்திய கட்டளைக் கொமாண்டர் ஜெனரல் “இங்கே ஒரு ஆச்சரியம் மறைந்திருக்கிறது” என புளகாங்கிக்கிறார். இது இன்று ஒரு பாரிய முக்கியத்துவமிக்க கண்டு பிடிப்பு என்று மேலும் அவர் உறுதிப்படுத்துகிறார். இந்த மகிழ்ச்சிக் கொந்தளிப்பின் அரசியல் என்ன என்பதை எல்லோரும் இப்போது கிட்டத்தட்ட புரிந்து கொண்டுவிட்டனர்.

அதேநேரம் அமெரிக்காஇ ஆப்கான் இன்னும் கனிய வளங்களை தனியாக கையாளும் நிலைக்கு தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை என்றும் ஆப்கான் அதனை தனது சொந்த வருமானத்துக்குரிய துறையாக மாற்றிக் கொள்வதற்கு பல தசாப்தங்கள் தேவைப்படலாம் என்றும் ஆலோசனைகூறியதோடு மட்டுமல்லாது மேலும் ஒரு படி சென்று அந்த ஆலோசனைகூறும் பணியையும் தானே பொறுப்பேற்றதுடன் ஆப்கானில் கனிப்பொருள் அபிவிருத்தியைக் கையாள்வதற்கான ஒரு சிறப்புக் குழுவொன்றையும் பென்டகன் நியமித்துள்ளது.

பென்டகன் கனிப்பொருள் ஆராய்ச்சித் தலைவரும்இ அமெரிக்க வர்த்தகப் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளரும “இதனைக் கையாள்வதற்கு ஆப்கானின் கனிய வள அமைச்சு தயாரில்லை. நாங்கள் அவர்களைத் தயார்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுவதிலிருந்தே அமெரிக்க நலன் வெளிப்படுகிறது.

இக்கனிய வளங்களின் பயன்பாடு வேறு எவரிடமும் சென்றுவிடக்கூடாது என்பதிலும் அமரிக்கா மிகவும் அவதானமாகவேயுள்ளது. பிராந்தியத்தில் சீனா இதன் மீது கடுமையான கவனத்தைச் செலுத்தி வருகிறது. ஆப்கானின் கனியவள அமைச்சர் இது தொடர்பில் சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்த முனைந்தபோது அவர் பதவி நீக்கப்பட்டார்.ஆப்கானின் இக்கனிய வள அபிவிருத்தியை விருத்திசெய்யும் பணியை பவுல் பிரிங்லி அமெரிக்காவைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். அவர் “இங்கு ஒரு பாரிய பிரச்சினையுள்ளது. சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் இதனை விருத்தி செய்ய முடியுமா? எப்படி அந்த வேலையை செய்வதென்பது யாருக்கும் தெரியாது” என அவர் குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இக்கனியவளப் பொருளாதாரத்தை விருத்தி செய்து ஏற்கனவே வறுமையினாலும் போரினாலும் சீரழிந்துள்ள ஆப்கானின் பொருளாதாரத்தை சீர்படுத்தி ஆப்கானை சமூகப் பொருளாதார அரசியல் அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நோக்கத்தை அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என்பதைத்ததான் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுக்களும் நடவடிக்கைகளும் எடுத்துக் காட்டுகின்றன.. உண்மையில் அமெரிக்காவிடம் ஆப்கானோ உலகமோ இதனை எதிர்பார்க்கவும் முடியாது.

Tuesday, 17 July 2012

ஈரானையும் சீனாவையும் வீழ்த்த இலங்கையில் கால்பதிக்கும்அமெரிக்கா தொடங்கவுள்ள போர்...........? கழற்றி விடப்பட்டுள்ள இந்தியா...???

இன்றைய நவீன உலகில் படைபலத்தை விட வலுவானது பொருளாதார வளங்களும், அதன் இருப்பும் தான். எங்கே பொருளாதார பலம் வலுவற்றுப் போகிறதோ அங்கே படைபலமும், வலிமையும் வலுவிழந்து போய்விடும். சுலபமாக அந்த நாடு தோற்கடிக்கப்பட்டு விடும். இலங்கையைப் பொறுத்தவரையில் தெற்காசியாவில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்துள்ளது. இதன் கேந்திரத்தன்மை தான், இலங்கையில் முப்பதாண்டுகளாகப் போர் நீடித்ததற்கும், இன்றைக்கும் சிக்கல்கள் தீராமல் இருப்பதற்கும் காரணமாக இருக்கிறது. இலங்கைத் தீவு உலகில் வேறு எங்கோ ஒரு மூலையில் இருந்திருக்குமேயானால், உண்மையில் தமிழர்களின் பிரச்சினை எப்போதே தீர்க்கப்பட்டிருக்கும். 

ஆனால், இந்தியாவின் காலடிக்குள், மேற்கு - கிழக்கு நாடுகளின் பயணப் பாதையில் இது இருப்பதால் தான் இத்தனை சிக்கல்களும் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போரின் போது மிகத் தந்திரமாக எல்லா வழிகளிலும் உதவிகளை வழங்கத் தொடங்கிய சீனா, மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. அந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு போருக்குப் பிந்திய முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ளத் தொடங்கியது. அம்பாந்தோட்டையில் விமான நிலையம், துறைமுகம், நுரைச்சோலையில் அனல் மின்நிலையம், கொழும்பு துறைமுக விரிவாக்கம், வீதிகள் அமைப்பு, ரயில்பாதை புனரமைப்பு என்று எல்லா வழிகளிலும் சீன முதலீடுகள் அதிகரித்துள்ளன. சீனா இலங்கையில் ஒரு இராணுவத் தளத்தை அமைத்துப் பெறக் கூடிய அனுகூலத்தை விட அதிகப்படியாக- இந்த முதலீட்டுத் திட்டங்களின் மூலம் இலங்கையில் தனது இருப்பை உறுதி செய்திருக்கிறது. 

ஒருபக்கத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தை திருகோணமலையில் இருந்து அகற்றும் முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ள அதேவேளை, அமெரிக்கா இதற்குள் நுழைய முனைகிறது. ஆக, மொத்தத்தில் இலங்கையில் பொருளாதார முதலீட்டுப் போர் ஒன்று ஒன்று உருவாகி வருகிறது. இதன் அடிப்படை நோக்கம் வெறுமனே பொருளாதார நலன்களை அடைவது மட்டும் அல்ல. இலங்கை மீதான ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதும் தான். இந்த முதலீட்டுப் போரில் அமெரிக்காவின் கை ஓங்குமேயானால், ஈரான், சீனா என இரண்டு காய்களை ஒரே நேரத்தில் அடித்து வீழ்த்தும்

சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மேலும் பலமடைந்து கொண்டிருக்கின்ற சூழலில், இந்தியாவுடனான நெருக்கம் குறைந்து வருகிறது. இதைச் சரி செய்வதற்கும், இலங்கையின் போக்கு தொடர்பாக கவலையை வெளிப்படுத்தவுமே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தார். இலங்கையில் மேற்கொள்ளும் திட்டங்களில் இருந்து மெல்லமெல்ல இந்தியா வெட்டி விடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் தான் அவரது பயணம் இடம்பெற்றிருந்தது. பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள இந்தியா இணங்கியிருந்தது. கடைசியாக அதிலிருந்தும் கழற்றி விடப்பட்டுள்ளது இந்தியா. அதேவேளை சீனாவுக்கு அதிகளவு திட்டங்களை தாரை வார்ப்பது தொடர்கதையாகியுள்ளது. மொறகஹகந்த என்ற பாரிய நீர்த்தேக்கத்தை கட்டும் பணிக்கான ஒப்பந்தம் கூட அண்மையில் சீனாவுக்கே வழங்கப்பட்டது. இவ்வாறாக சீன முதலீடுகள் இலங்கையில் அதிகரித்து வருவதை இந்தியாவும், அமெரிக்காவும் கவலையோடு பார்க்கின்றன.

இன்றைய நவீன உலகில் படைபலத்தை விட வலுவானது பொருளாதார வளங்களும், அதன் இருப்பும் தான். எங்கே பொருளாதார பலம் வலுவற்றுப் போகிறதோ அங்கே படைபலமும், வலிமையும் வலுவிழந்து போய்விடும். சுலபமாக அந்த நாடு தோற்கடிக்கப்பட்டு விடும். இலங்கையைப் பொறுத்தவரையில் தெற்காசியாவில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்துள்ளது. இதன் கேந்திரத்தன்மை தான், இலங்கையில் முப்பதாண்டுகளாகப் போர் நீடித்ததற்கும், இன்றைக்கும் சிக்கல்கள் தீராமல் இருப்பதற்கும் காரணமாக இருக்கிறது. இலங்கைத் தீவு உலகில் வேறு எங்கோ ஒரு மூலையில் இருந்திருக்குமேயானால், உண்மையில் தமிழர்களின் பிரச்சினை எப்போதே தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தியாவின் காலடிக்குள், மேற்கு - கிழக்கு நாடுகளின் பயணப் பாதையில் இது இருப்பதால் தான் இத்தனை சிக்கல்களும் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போரின் போது மிகத் தந்திரமாக எல்லா வழிகளிலும் உதவிகளை வழங்கத் தொடங்கிய சீனா, மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. அந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு போருக்குப் பிந்திய முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ளத் தொடங்கியது. அம்பாந்தோட்டையில் விமான நிலையம், துறைமுகம், நுரைச்சோலையில் அனல் மின்நிலையம், கொழும்பு துறைமுக விரிவாக்கம், வீதிகள் அமைப்பு, ரயில்பாதை புனரமைப்பு என்று எல்லா வழிகளிலும் சீன முதலீடுகள் அதிகரித்துள்ளன. சீனா இலங்கையில் ஒரு இராணுவத் தளத்தை அமைத்துப் பெறக் கூடிய அனுகூலத்தை விட அதிகப்படியாக- இந்த முதலீட்டுத் திட்டங்களின் மூலம் இலங்கையில் தனது இருப்பை உறுதி செய்திருக்கிறது.

ஆரம்பத்தில் சீன முதலீடுகள் தொடர்பான இந்தியாவின் எதிர்ப்பை சமாளிக்க, இந்தியாவுக்கும் சில திட்டங்களை வழங்க முன்வந்தது இலங்கை. அவ்வாறு வழங்கப்பட்டதே சம்பூர், காங்கேசன்துறை, பலாலி மற்றும் வடபகுதி ரயில்பாதை புனரமைப்பு என்பனவாகும். இவற்றில் வடபகுதி ரயில்பாதை புனரமைப்புத் திட்டமும், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டமும் தான் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. ஏனைய திட்டங்கள் இழுபறியிலேயே உள்ளன. முன்னரெல்லாம், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கை அரசின் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மாறிமாறி சமமானளவு சந்தர்ப்பம் கொடுத்து பயணம் மேற்கொண்டனர். 

இப்போது நிலைமை அப்படியில்லை. இந்தியா பக்கம் இலங்கை அமைச்சர்கள் யாரும் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. ஆனால், சீனாவுக்கு கிரமமான பயணங்களை மேற்கொள்ளும் அமைச்சர்கள் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். மன்னார் கடற்படுகையில் எண்ணெய் அகழ்வுத் துண்டங்கள் அனைத்தையும் இந்தியா தமக்கே தருமாறு கோரியது. ஆனால் அதற்கு இலங்கை இணங்கவில்லை. புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரும் முடிவில் அரசாங்கம் உள்ளது. இங்கு எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட ரஸ்யா, வியட்னாம், சீனா போன்ற நாடுகள் கூட ஆர்வத்துடன் உள்ளன. வேறு நாடுகள் கால் வைத்தால், அது தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதுவதால் தான் தம்மிடமே தரக் கோரியது.

இந்தநிலையில் அமெரிக்க நிறுவனங்கள் இலங்கையின் எண்ணெய் மற்றும் இயற்கை வள உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கத் தூதுவர் பதவியை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள பற்றீசியா புரெனிஸ் தான் இதனைக் கூறியுள்ளார். எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இயற்கை எரிவாயு வளங்களில் முதலிடுவதில் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், 

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் அதிகளவில் இடம்பெறும் என்றும் அவர் கூறியுளார். இது இந்தியாவுக்குப் போட்டியாக மன்னார் எண்ணெய் படுகையை அமெரிக்கா குறிவைக்கிறதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில், இந்தியாவுடன் போட்டி போட்டுக் கொள்ளவோ, முட்டி மோதிக் கொள்ளவோ அமெரிக்கா முனையாது. இந்தநிலையில், இலங்கையில் அதிகளவு முதலிடும் அமெரிக்காவின் குறி என்னவென்பதை சுலபமாகவே ஊகிக்க முடிகிறது. அதாவது, இலங்கையுடன் நெருக்கம் காட்டும் சீனாவையும், ஈரானையும் அதனிடம் இருந்து தூரவிலக வைப்பது தான் அமெரிக்காவின் திட்டமாகும். சீன முதலீடுகளுக்கு நிகரான முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் தனது இருப்பை உறுதி செய்து கொள்வதே அமெரிக்காவின் ஒரு திட்டம்.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியையும் இலங்கையுடனான உறவுகளையும் முடக்குவது அடுத்த திட்டம். சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துக் கொடுத்தது ஈரான் தான். அங்கு ஏனைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயை சுத்திகரிக்க முடியாது. இது தனது எண்ணெய் ஏற்றுமதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொண்ட தந்திரம். ஈரான் மீதான அமெரிக்காவின் எண்ணெய் ஏற்றுமதித் தடையை அடுத்து, இலங்கையும் அதற்கு இணக்கி எண்ணெய் இறக்குமதியைக் குறைத்தது. இதனால் அமெரிக்காவின் தடைகளில் இருந்து இலங்கைக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கம் கொஞ்சமும் குறையவில்லை. 

றியோடிஜெனீரோவில் ஈரானிய ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது, வெளியிடப்பட்ட கருத்துகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன. இரு நாடுகளும் இணைந்து புதிய உலக ஒழுங்கை உருவாக்கப் போவதாக கூறியதும், மேற்கு நாடுகளைத் திமிர்பிடித்த நாடுகள் என்று வர்ணித்ததும், அமெரிக்காவுக்கு எத்தகைய உணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்லிக் கொள்ளத் தேவையில்லை. ஈரானை இலங்கையின் எண்ணெய் வளத்துறையில் இருந்து அகற்றுவதற்கு ஒரே வழி, அமெரிக்க நிறுவனங்களை முதலிடச் செய்வது தான் என்று அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது.

ஒருபக்கத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தை திருகோணமலையில் இருந்து அகற்றும் முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ள அதேவேளை, அமெரிக்கா இதற்குள் நுழைய முனைகிறது. ஆக, மொத்தத்தில் இலங்கையில் பொருளாதார முதலீட்டுப் போர் ஒன்று ஒன்று உருவாகி வருகிறது. இதன் அடிப்படை நோக்கம் வெறுமனே பொருளாதார நலன்களை அடைவது மட்டும் அல்ல. இலங்கை மீதான ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதும் தான். இந்த முதலீட்டுப் போரில் அமெரிக்காவின் கை ஓங்குமேயானால், ஈரான், சீனா என இரண்டு காய்களை ஒரே நேரத்தில் அடித்து வீழ்த்தும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரான்மீது முடக்கும் பொருளாதாரத் தடைகளைச் சுமத்துகின்றன.

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளது, நேற்றில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, தெஹ்ரானுடன் ஆபத்து மிகுந்த அமெரிக்கத் தலைமையிலான மோதலின் தீவிர விரிவாக்கத்தைக் குறிக்கிறது. புதிய அமெரிக்க அபராதங்களுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றியத் தடை பேர்சிய வளைகுடாவில் அழுத்தங்களை அதிகரிக்கும், இராணுவ மோதல் என்னும் ஆபத்தை உயர்த்தும்.

ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை வரவேற்ற அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் கிளின்டன் ப்ளூம்பெர்க் வானொலி நிலையத்திற்கு சனிக்கிழமை அன்று கூறினார்: “அழுத்தம் கொடுத்தல் என்பதுதான் இப்பொழுது நம்முடைய முக்கிய குவிப்பு, பொருளாதாரத் தடைகள் ஈரானை [பேச்சுவார்த்தைகளுக்காக] மேசைக்கு கொண்டுவரும் என நாங்கள் நம்புகிறோம்.” என்றார். அவர் மேலும் கூறினார்: “அவை [பொருளாதாரத் தடைகள்] அவர்களுக்கு [ஈரானியர்களுக்கு] கூடுதல் பொருளாதார இடர்களை அதிகரிக்கும் வகையில் தொடரும்.”

உண்மையில் ஒபாமா நிர்வாகம் ஈரானிய ஆட்சியுடன் அதன் அணுசக்தித் திட்டம் குறித்து உண்மையான விவாதங்களில் ஈடுபடுவதற்கு விருப்பம் எதையும் கொண்டிருக்கவில்லை. வாஷிங்டன் தெஹ்ரானை தன் இறுதி எச்சரிக்கையை ஏற்குமாறு வலுவான திட்டங்கள் மூலம் முயல்கிறது; அந்த எச்சரிக்கை ஈரானுக்கும் P5+1 குழு—அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி—ஆகியவற்றிற்கும் ஏபரல் மாதம் இஸ்தான்புல்லில் நடத்த பேச்சுக்கள் போது கூறப்பட்டது.

அமெரிக்கா ஈரான் யுரேனிய அடர்த்தியை 20%த்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், அதன் இருப்புக்களை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும், போர்டௌவில் இருக்கும் அதன் யுரேனிய அடர்த்தி ஆலையை மூடவேண்டும் என்று கோரியுள்ளது. இதற்குப் பதிலாக தெஹ்ரானுக்கு கிட்டத்தட்ட ஏதும் கிடைக்கவில்லை—அதன் வணிக விமானத்திற்கு உதிரிபாகங்கள் பெறுதல், தெஹ்ரானில் இருக்கும் அதன் அணு ஆலைக்கு எரிபொருள் தட்டுக்கள் அல்லது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மேல் பொருளாதாரத் தடைகளைச் செயல்படுத்தப்படப்போவதில்லை என்றோ கூறப்படவில்லை.

ஜூன் 18-20 ல் மாஸ்கோவில் நடக்கும் பேச்சுக்கள், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இக்கோரிக்கைகளை சிறிதும் குறைக்கத் தயாராக இல்லை என்ற நிலையில் கிட்டத்தட்ட முறிந்து போயின; அவற்றுள் சமீபத்திய அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகள் சுமத்தப்படுதலும் அடங்கும். திட்டமிடப்பட்ட மற்றும் ஒரே ஒரு கூட்டம், குறைந்த தரத்தில் உள்ள தொழில்நுட்பப் பேச்சுக்கள், இஸ்தான்புல்லில் நாளை நடக்க இருப்பவை, பேச்சுக்கள் முற்றிலும் சரிந்துவிடுவதைத் தடுக்கும் முயற்சியைத் தவிர வேறு ஏதும் இல்லை.

ஐ.நா.விற்கான ஈரானின் தூதர் மகம்மத காஜயீ, கடந்த வாரம் புதிய பொருளாதாரத் தடைகளை கண்டித்தார். “இதுவே அவர்கள் எங்களுடன் பொருளார்ந்த உரையாடல் நடத்த விரும்பவில்லை என்பதைத்தான் குறிக்கிறது.... பேச்சுக்கள் முறையாக நடக்கவில்லை என்றால், பேச்சுக்களில் மற்றொரு தேக்கத்தை நாம் காண்போம்.”
ஐரோப்பிய ஒன்றியம் ஜனவரி மாதத்தில் இருந்து ஈரானில் இருந்து பெறும் எண்ணெய் இறக்குமதிகள் மீது தடை என முடிவு எடுத்தது; ஆனால் இருக்கும் ஒப்பந்தங்கள்படி உறுப்பு நாடுகள் மாற்றீட்டு அளிப்புக்களைப் பெறுவதற்காக ஐந்து மாத இடைக்காலத் தொடர்பு நீடிக்க அனுமதித்தது. ஒரு பொருளாதார நெருக்கடியை ஏற்கனவே எதிர்கொண்டுள்ள இத்தாலியும் கிரேக்கமும் குறிப்பிடத் தக்க வகையில் பாதிப்பிற்கு உட்படும். “குறிப்பாக, கிரேக்கம் பாதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அது அதன் ஈரானில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய்க்கு ஆதரவான நலன்களைப் பெற்று வந்தது; பிற அளிப்பாளர்கள் அத்தகைய ஆதாயங்களைக் கொடுக்க இயலாது” என்று Chatham House பகுப்பாய்வாளர் போல் ஸ்டீவன்ஸ் BBC இடம் கூறினார்.


கடல்வணிகக் காப்பீட்டை ஈரானிய எண்ணெயை எடுத்துச் செல்லும் கப்பல்களுக்கு அளிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் தடை ஒன்றும் நேற்றில் இருந்து செயலுக்கு வந்தது. லண்டனைத் தளமாகக் கொண்ட International Group P&I குழுக்கள் உலகின் எண்ணெய்க் கப்பல்களில் 95%க்கு காப்பீடு அளிக்கின்றன. கடந்த வாரம் சியோல் அது ஈரானிய கச்சா எண்ணெய் வாங்குவது அனைத்தையும் காப்பீடு இல்லாததால் நிறுத்தப்போவதாக அறிவித்தபின் தென் கொரியாவுடன் உடன்பாட்டிற்காகப் பெருந்திகைப்புடன் பேச்சுக்களை நாடியுள்ளது. தென் கொரியா ஈரானிய எண்ணெய் வாங்கும் நாடுகளில் நான்காம் பெரிய நாடு ஆகும்.

அமெரிக்க சட்டம் ஒன்று, ஈரானிய மத்திய வங்கியுடன் வணிகம் நடத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்புடையது கடந்த வியாழன் முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நடவடிக்கை ஏற்கனவே ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகள்,குறிப்பாக, ஆசியாவிற்குச் செல்லுவதில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது; ஏனெனில் ஜனாதிபதி ஒபாமா அளிக்க இருக்கும் ஆறு மாத கால விலக்கிற்காக நாடுகள் குறைந்த கச்சா எண்ணைய் வாங்குவதில் பரபரப்புக் காட்டின. இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஸ்ரீலங்கா உட்பட 20 நாடுகள் தற்காலிக விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

கடைசி நிமிடத்தில்தான் சீனாவிற்கும் ஒபாமா விதிவிலக்கு அளித்தார்; இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளின் சரிவில் பெரும் சரிவை ஏற்பட்டிருக்கக் கூடியதைத் தவிர்த்துள்ளது. அமெரிக்கச் சட்டத்தின்படி, ஈரானுடன் வணிகம் செய்யும் நிறுவனங்கள் அமெரிக்க வங்கி, நிதிய முறைகளுடன் தொடர்பு கொள்ள முடியாது. சீன வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் ஹோங் லீ கடந்த வாரம் ஈரான்மீது எந்தவித ஒருதலைப்பட்சப் பொருளாதாரத் தடைகளுக்கும் தன் அரசாங்கத்தின் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார்: “இன்னும் குறைந்த வகையில்தான் பெய்ஜிங் இத்தகைய ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் மூன்றாம் நாடுகளின்மீது சுமத்தப்படுவதை எற்கும்.”

புதிய அபராதங்களின் பாதிப்பை ஈரானிய அதிகாரிகள் உதறித்தள்ளனிர். ஈரானின் மத்திய வங்கியின் கவர்னர் மகம்மது பஹமனி தன் நாடு “வெறுமே உட்கார்ந்திராது” வெளிநாட்டு நாணய இருப்புக்கள் வகையில் $150 பில்லியனை “இத்தீய கொள்கைகளுக்கு” எதிராகப் போரிட உதவக் கொண்டுள்ளது என்று கூறினார்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத் தடை ஏற்கனவே தீவிர பொருளாதார இடர்களைக் கொண்டுள்ள ஈரானுக்கும், அதன் தொழிலாள வர்க்கத்திற்கும் கடுமையான பாதிப்பைக் கொடுக்கும். ஐரோபிய நாடுகள் ஓராண்டிற்கு முன் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளில் 18% இறக்குமதியைக் கொண்டிருந்தன; ஆனால் அந்த எண்ணிக்கை ஏற்கனவே மிகவும் சரிந்துவிட்டது; இப்பொழுது இன்னும் குறைந்துவிடும். மொத்தத்தில் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 40% சரிந்துவிட்டன; நாள் ஒன்றிற்கு 1.5 பில்லியன் பீப்பாய்கள்தான், கடந்த ஆண்டில் இருந்த 2.5 பீப்பாய்களுக்குப் பதிலாக ஏற்றுமதி ஆகின்றன.


எண்ணெய், அதில் இருந்து பெறப்படும் பொருட்கள் ஈரானின் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 80% உள்ளன; அரசாங்க வருவாயில் கிட்டத்தட்ட பாதி அவற்றில் இருந்துதான் வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடைகளால் நாட்டு நாணயத்தின் மதிப்பு அமெரிக் டாலருக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளில் 40% குறைந்துவிட்டது. ரியல் கடந்த இரு வாரங்களில் மட்டும் 15% சரிந்துவிட்டது; இது பணவீக்கம் பெருத்துள்ளதற்குக் காரணம் ஆகும்.
ஈரானின் மத்திய வங்கி கொடுத்துள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் ஆண்டு பணவீக்க விகிதம் குறைந்த பட்சம் 25% எனக் காட்டியுள்ளன. 

பொருளாதாரத் தடைகள் சுமத்தப்படுவதற்கு முன்பு, அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து நிறைய அளவில் பொருட்களை வாங்கியது: அதையொட்டி உள்ளூரில் இருந்து தேவைகள் வரவில்லை, ஆலைகள் மூடப்பட்டன. இப்போக்கு ஊகவணிகத்தாலும் அதிகமாயிற்று; வணிகங்கள் சொத்துக்களை உற்பத்தியில் இருந்து நிலங்களை வாங்குவதற்கு மாற்றினர், வெளிநாட்டு நாணயங்களைப் பெறுவதற்கு மாற்றினர். ஆலை மூடல்கள், வேலை இழப்புக்கள் ஆகியவை நாட்டின் ஏற்கனவே உயர்ந்துவிட்ட வேலையின்மை விகிதங்கள், குறைந்தவேலைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றை மோசமாக்கிவிட்டன; குறிப்பாக இளைஞர்களிடையே.

முடக்கும் பொருளாதாரத் தடைகள் ஈரானிய ஆட்சியை வாஷிங்டன் விதிகளுக்கு உட்பட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் கட்டாயத்தைக் கொடுக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளன என்பதுடன் பொருளாதார யுத்தங்களும் ஆகும்; இவை நாட்டில் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் நோக்கத்தை உடையவை, ஈரான்மீது இராணுவத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் பல முறை அனைத்து விருப்புரிமைகளும்—இராணுவத் தாக்குதல் உட்பட—மேசைமீது உள்ளன என்று எச்சரித்துள்ளன. இரு நாடுகளும் ஒருதலைப்பட்ச, சட்டவிரோத ஈரான் மீதான தாக்குதல்கள் பற்றி தயாரிப்பில் அதிக அளவைக் கொண்டுள்ளன.

ஈரான் ஏற்கனவே பல முறை ஆதாரமற்ற அமெரிக்கக் கூற்றான அது அணுவாயுதங்களைத் தயாரித்து வருகிறது என்பதை மறுத்து, அதன் அணு சக்தி திட்டங்கள் சமாதான நோக்கத்திற்குத்தான் என வலியுறுத்தியுள்ளது. அணு சக்தி பிரச்சினை ஒபாமா நிர்வாகத்தால் தெஹ்ரானில் அமெரிக்கப் பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு இணங்க நடக்கும் ஆட்சி ஒன்றை நிறுவும் அதன் பொறுப்பற்ற முயற்சிக்கு ஒரு போலிக்காரணமாகப் பயன்படுத்திவருகிறது. புதிய தடைகள் சுமத்தப்படுவது முழுப் பிராந்தியத்தையும் மற்றய சக்திகளையும் மோதலில் ஈடுபடுத்தும் அச்சுறுத்தலை நோக்கிய இன்னுமொரு படியாகும்.